2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (25) பாராளுமன்றத்தில் நடைபெறுகின்றது.
இதற்கமைய, இன்றைய பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய குழுநிலை விவாதத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுகள் தொடர்பான விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானது.
இந்த விவாதங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை தொடரவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்படி, குறித்த வாக்கெடுப்பின் மூலம் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
