2026ஆம் ஆண்டுக்கான 75ஆவது சர்வதேசப் பிரபஞ்ச அழகிப் போட்டியில், புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
116 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்று, புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் நேற்று (24) நடைபெற்றது.
போட்டியின் பல்வேறு சுற்றுகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட ஜெனிபர் பாரெட்டோ, இறுதியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
புதிய பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடிய அவருக்கு, வெனிசுலாவைச் சேர்ந்த பிரபல நகை வடிவமைப்பாளர் ஜோர்ஜ் விட்டெல்ஸ் வடிவமைத்த பிரம்மாண்டமான மகுடம் அணிவிக்கப்பட்டது.
'நித்திய மரபின் ஒளி' (The Radiance of Eternal Legacy) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மகுடத்தில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 48ஆவது இலங்கைப் பிரபஞ்ச அழகியான நிம்ஹாரா சசிந்தி, 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பிரபஞ்ச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றிருந்தார்.
