இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று ஆஜரானார் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

 

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று (25) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விசாரணை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை