சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
ரியாத் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள அண்மைக்கால பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு, செயல்பாட்டு மறுஆய்வுகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினரின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், நிலவும் சூழ்நிலை வர்த்தக விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்குப் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பயணிகள் தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்
விமான சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பயணிகள் பின்வரும் இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்:
- இலங்கையிலிருந்து: 1979
- சர்வதேச அழைப்புகளுக்கு: +94 11 777 1979
- WhatsApp செய்திகள் மட்டும்: +94 74 444 1979
மேலும், பயணிகள் தங்களது பயண முகவர் ஊடாகவோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவோ மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
ரியாத் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது விமானப் பயணத்தின் தற்போதைய நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
