விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: நிலுவை ஓய்வூதியங்களை வழங்க நடவடிக்கை.

 பழைய விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களித்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியத் தொகைகளை செலுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, திறைசேரியினால் வழங்கப்படும்
நிதி ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப, 2025ஆம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கானதும், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கானதுமான நிலுவை ஓய்வூதியங்களை வழங்கும் நடவடிக்கைகள் 2026 ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் கீழ், இதுவரை சுமார் 38 மில்லியன் ரூபாய் ஓய்வூதியத் தொகை 2,910 விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகைகளை உரிய பயனாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.