பத்தேகம முக்கொலைச் சம்பவம்! அம்பலாங்கொடையில் சந்தேகநபர் கைது...

 



பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரு பெண்களும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் நேற்று (4) அம்பலாங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 48 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ள காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர், சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.