லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இதுவரை 475 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 495 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தத்தின் மூலம் 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 20 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.