சவுதி அரேபியாவின் அப்ஹா (Abha) மற்றும் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யேமனை தளமாகக் கொண்டு செயற்படும் ஹூதி கிளர்ச்சியாளர்களே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்ஹா சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விமான நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உரிய தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகப்பு / உலகச் செய்திகள்
/ சவுதி விமான நிலையங்கள் மீது தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்.......
