கித்துல்கலை நீர்வீழ்ச்சியில் இருவர் நீரில் மூழ்கினர் – ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்

 




கித்துல்கலை மன்னகெட்டிய நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் காணாமல் போயுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கித்துல்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.