பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.



1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவின் பேரில் குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வந்த பின்னர், பயங்கரவாதம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.