அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தனது கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில், வட்டி வீத இலக்கு வரம்பை 3.50%–3.75% இலிருந்து 3.75%–4.00% ஆக 0.25 சதவீதப் புள்ளிகளால் உயர்த்துவதற்கு மத்திய வங்கியின் கொள்கைக் குழு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட்டி வீதங்களை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டி வீத உயர்வுக்கு பதிலளித்த ட்ரம்ப், வட்டி வீதங்கள் குறைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் எதிர்பார்த்த அளவில் குறையாத நிலை மற்றும் பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்க அழுத்தங்களை கருத்திற்கொண்டு வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பின்னர் அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்ட முதல் வட்டி வீத உயர்வாகும்.
