கட்சி பெயர் குறித்து கேள்வி: சிரித்தபடி சென்ற தனுஷ்....

 


தேசிய விருது பெற்ற நடிகரும் இயக்குநருமான தனுஷ், கட்சி பெயர் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு சிரித்தபடி பதிலளிக்காமல் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

72ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 22ஆம் திகதி குஜராத்தில் நடைபெற்றது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளுக்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்துக்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அதேவேளை, தனுஷ் இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை பெற்றது. இதன்மூலம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் என தனுஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி

தேசிய திரைப்பட விருது விழாவில் பங்கேற்ற பின்னர் தனுஷ் அகமதாபாத் வழியாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அங்கு செய்தியாளர்கள் அவரிடம் தேசிய விருது பெற்றது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தனுஷ், தேசிய விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, அவரது கட்சி பெயர் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு தனுஷ் சிரித்தபடி எந்தப் பதிலும் தெரிவிக்காமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.