புத்தளம்–மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (CTB) சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி இன்று (24) காலை விபத்துக்குள்ளாகியுள்ளன.
வெல்லவாயவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து, மஹகொடையாய பகுதியில் பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, பின்னால் இருந்து வந்து CTB பேருந்தின் பின்பகுதியில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
