முல்லைத்தீவில் அதிர்ச்சி சம்பவம்! பெற்றோர் இருவர் கொலை




 முல்லைத்தீவு, மாங்குளம் – பனிக்கன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

70 வயதுடைய தந்தையும் 59 வயதுடைய தாயுமே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

பெற்றோர் மற்றும் அவர்களின் 43 வயதுடைய மகள் ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.