கித்துல்கல, மன்னகெட்டிய நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், மற்றைய நபர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
