மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலத்தை பண்ணையாளர்களுக்கு மீட்டுக்கொடுப்போம் – கந்தசாமி பிரபு

 



மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கான நிலத்தை பண்ணையாளர்களுக்கு மீட்டுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த முயற்சிகள் கைவிடப்படமாட்டாது எனவும், தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே மேய்ச்சல் தரைக்கான நிலத்தை விடுவித்து பண்ணையாளர்களுக்கு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1000 நாட்களைக் கடந்த பண்ணையாளர்களின் போராட்டம்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான பண்ணையாளர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதாக கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு முதல் தங்களது மேய்ச்சல் நில உரிமைக்காக பண்ணையாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருவதாகவும், அவர்களின் போராட்டம் 1000 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 மே 20ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தபோது நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அப்போது, மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான 1,570 ஏக்கர் நிலப்பரப்பை பண்ணையாளர்களின