களு கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணிநேரம் நீடிப்பு!


களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணியளவில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையே இவ்வாறு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறும், குறிப்பாக கிளை வீதிகளைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அதிகாரிகளால் வழங்கப்படும் மேலதிக அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.