யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: ஆலய பூசகர் உயிரிழப்பு – பட்டா வாகனம் தடம்புரண்டது!

 



யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை முனீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் ஆலயப் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை நிறைவு செய்துவிட்டு வீதிக்கு வந்த இளைஞர் ஒருவருடன் பூசகர் மோதுண்டு வீதியில் விழுந்துள்ளார். இதன்போது பின்னால் வந்த வாகனம் பூசகர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட்டா வாகனம் தடம்புரண்டது

இதேவேளை, விபத்தில் சம்பந்தப்பட்ட பட்டா வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் ஒன்றில் மோதி தடம்புரண்டுள்ளது.

உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.