🌍 சுற்றுலா வளர்ச்சியில் உலகின் முன்னணி 10 நாடுகளில் இலங்கை!

2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் சுற்றுலா அபிவிருத்திக் குறியீட்டின்படி (Travel & Tourism Development Index), உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத் துறையைக் கொண்ட முன்னணி 10 நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.


2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇱🇰 இலங்கைக்கு 10ஆவது இடம்

குறித்த குறியீட்டின் அடிப்படையில், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா நாடுகளில் இலங்கை 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் சர்வதேச சுற்றுலா போட்டித்திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த தரவரிசை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.