சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக Telegraphic Transfer (T/T) முறையின் ஊடாக மாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மருதானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் இவ்வாறு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.