கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!


பொரளை – சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியில் 5 பேர் பயணித்துள்ளதாகவும், அதில் இருந்து 3 வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.