70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று கணக்குகளில்!


2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மேலும் 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் வைப்பிலிடப்படவுள்ளது.

இதன்படி, உரிய பயனாளிகள் இன்று (03) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.