எரிபொருள் விலையில் மீண்டும் மாற்றம் – உலை எண்ணெய், நெப்தா விலை குறைந்தது!!



இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உலை எண்ணெயின் புதிய விலை ஒரு லீற்றருக்கு 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நெப்தாவின் புதிய விலை ஒரு லீற்றருக்கு 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.