கொழும்பு: களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையே இவ்வாறு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குடா கங்கை உப படுகையைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளும், குறிப்பாக கிளை வீதிகளைப் பயன்படுத்துவோரும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ள நிலைமை தொடர்பில் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
