மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,000 போதை மாத்திரைகளுடன் 35 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) மாலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் தொடர்பிலும், சந்தேகநபரின் பின்னணி குறித்தும் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.