கொழும்பு 14 இளைஞர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

 


கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள மூவதொர உயன வீட்டுத் திட்டத்திற்கு அருகில் 31 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 31 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.