இன்று (27) அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுரஞ்சித் வேவிட, நியூஸ் ஃபெஸ்ட் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் மாணவர்கள் சுற்றுலாத்துறையில் தொழில் முனைவோராக உருவாகுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக சுற்றுலாத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
