16 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது.

 




சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 31 வயதுடைய பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே, ரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்