மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு – மூன்று மாவட்ட மக்களுக்கு அவதான அறிவிப்பு.



 இதன்படி, கண்டி மாவட்டத்தில் கங்க இஹல கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு கட்டம் 3 ஆம் கட்டத்தின் கீழ், மண்சரிவு அபாயம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடரும் மழை, நிலத்தின் ஈரப்பதம் அதிகரிப்பு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.