பளிச்சென்ற சருமத்திற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை குறிப்புகள்.




 காற்று மாசுபாடு, வெயில் தாக்கம், கரும்புள்ளிகள், சன் டேன் மற்றும் சரும வறட்சி போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க, வீட்டிலேயே கிடைக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி எளிய முறையில் சருமத்தை பராமரிக்கலாம்.

அரிசி மாவு மற்றும் பால் கிளென்சிங்:

அரிசி மாவுடன் தேவையான அளவு காய்ச்சாத பாலை கலந்து மென்மையான கலவையாக தயாரிக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி மேல்நோக்கி மெதுவாக மசாஜ் செய்யலாம்.

கலவை மிகவும் கெட்டியாக இல்லாமல் சற்று இலகுவாக இருக்க வேண்டும். சுமார் 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

காபி ஸ்க்ரப்:

காபி தூள், சர்க்கரை, தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து ஸ்க்ரப் போல பயன்படுத்தலாம்.

இந்த கலவையை முகத்தில் தடவி 3 முதல் 5 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். சருமத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க, முகத்தை கடுமையாக தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.

பப்பாளி மற்றும் தேன் முக மாஸ்க்:

நன்றாக பழுத்த பப்பாளியை கூழ் போல செய்து, அதனுடன் 1 அல்லது 2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் மாஸ்க் போல தடவலாம்.

10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, முகத்தை மென்மையாக குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் இயற்கையான பொலிவையும் வழங்க உதவும்.

இயற்கை பராமரிப்பு முறைகளை தொடர்ந்து பின்பற்றுவதுடன், சருமத்திற்கு ஏற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது முக்கியம்.