உலகளவில் வசூலை குவிக்கும் ஸ்பைடர்மேன்!!

 


கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூலை 31ஆம் திகதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

இத்திரைப்படத்தில் டாம் ஹொலண்ட் கதாநாயகனாகவும், ஜெண்டாயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படத்திற்குப் பின்னர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதிய திரைப்படம் வெளியாகியுள்ளது.

மார்வெல் திரைப்பட வரிசையில் 38ஆவது திரைப்படமாகவும், ஸ்பைடர்மேன் தொடரின் நான்காவது பாகமாகவும் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிரடி காட்சிகள், புதிய எதிரிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் திரையரங்குகளை நாடி வருகின்றனர்.

வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் ரூ.72 கோடி வசூலித்த இந்த திரைப்படம், இந்தியாவில் ஹொலிவுட் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அதிக முதல் நாள் வசூல் சாதனையை பெற்றிருந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் சாதனையை இது முறியடித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் ரூ.131 கோடி வசூலை பெற்றுள்ளதாகவும், உலகளவில் ரூ.2,600 கோடி வசூலை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.