UGC அறிவிப்பு: பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் உடனடியாக பதிவு செய்யவும்.

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

இந்த பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதி தொடர்பான மேன்முறையீடுகள் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிடுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.