தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சிக்கு செல்லும் பாதையில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள இந்த மண்சரிவு காரணமாக, குறித்த பகுதியில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது பருவகால யாத்திரை நடைபெறாத காலப்பகுதியாக இருப்பதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதையை பயன்படுத்தி சிவனொளிபாத மலையை சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலைமை சீரடைந்த பின்னர், பாதையில் சரிந்து விழுந்துள்ள மரங்கள் மற்றும் மண்மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நல்லத்தண்ணி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
