நாட்டின் சில கடற்பரப்புகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை குறித்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு முதல் காங்கேசன்துறை, புத்தளம், திருகோணமலை, கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
.jpeg)