அந்த வகையில், இலங்கை தமிழராக சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சபேசன்.
தனது தனித்துவமான குரல் மற்றும் பாடும் திறமையால் ரசிகர்களை கவர்ந்த சபேசன், குறித்த சீசனில் இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் வென்றிருந்தார்.
இந்நிலையில், சபேசன் தனது நீண்டகால காதலியான ரிக்ஷானாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். சரிகமப மேடையிலேயே தாம் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக சபேசன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தனது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சபேசன் மற்றும் ரிக்ஷானா தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.