திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற குளவி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக் கட்டடத்தில் அமைந்திருந்த குளவிக் கூடு கலைந்ததையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)