சிறுவர்களுக்கு தமது சமூக வலைதளங்கள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் குறித்து போதிய எச்சரிக்கைகளை வழங்கத் தவறியதாகக் கூறி, மெட்டா நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்ற நீதிபதி பிரையன் பீட்ஷீட் நேற்று (6) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.
சிறுவர்களின் ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய நீதிமன்றத் தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
நீதிபதியின் உத்தரவின்படி, இந்த அபராதத் தொகை எதிர்காலத்தில் சமூக பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்படும் நிதியத்தில் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகள் காற்று மாசுபாடு போன்ற பொதுப் பிரச்சினையாக கருதப்பட வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய தீர்ப்பு, இதற்கு முன்னர் மெட்டா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 375 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதத் தீர்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்டா நிறுவனம் எதிர்கொள்ளும் மொத்த அபராதத் தொகை 942 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
Facebook, Instagram, WhatsApp மற்றும் Threads உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்களை இயக்கும் மெட்டா நிறுவனம், முன்னைய 375 மில்லியன் டொலர் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)