சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். மேலும், பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தென்மேற்கு திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம் வரையிலான கடற்பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதனால், சில கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை மற்றும் கடல் நிலைமைகளை அவதானித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
