இதன்படி, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை குறித்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
.jpeg)