குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால், மறு அறிவித்தல் வெளியாகும் வரை இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி உள்ளிட்ட கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், அந்த பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
