கடந்த (03) ஆம் திகதி நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து, கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை பாதுகாப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
பின்னர் வானிலை நிலைமை சீரடைந்ததையடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இன்று (04) காலை 6.00 மணி முதல் குறித்த வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
