இதன்படி, குறித்த அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலத்தின் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகளால் அதிகரிக்கவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், தலைமை நீதிபதியின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தும் ஏற்பாடும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பொதுமக்கள் அல்லது தொடர்புடைய தரப்பினரால் சட்டரீதியான சவால்களை முன்வைக்க முடியும் எனவும், அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால் சட்டமூலத்தின் நடைமுறைப்படுத்தல் காலதாமதமாகலாம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
நீதித்துறையின் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
