பலத்த மழை காரணமாக ஏற்பட்ட இந்த மண்சரிவில் வீட்டுக்குள் இருந்த நால்வர் சிக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நாவலப்பிட்டி சோலங்கந்த பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியின் 2ஆம் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக முற்றாக மூடப்பட்டுள்ளது.
மேலும், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கையின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த 53 வயதுடைய ஒருவர் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீதியில் பயணித்த 45 வயதுடைய ஒருவர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
