நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், காற்றாலை மின்நிலையங்கள் ஊடாக எதிர்வரும் ஆண்டில் 400 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதுடன், எதிர்காலத்தில் மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)