நெடுந்தீவு கடலில் இந்திய இழுவைப் படகு விபத்து: 11 மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை.



இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு (05) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக குறித்த இந்திய இழுவைப் படகு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, படகில் பயணித்த 11 இந்திய மீனவர்கள் ஆபத்தான நிலைக்கு உள்ளாகிய நிலையில், அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.