60 வயதை நிறைவு செய்துள்ள, ஒழுக்கமான சேவைப் பதிவைக் கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் மனிதவள பற்றாக்குறை தொடர்பாக எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டார்.
மேலும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் ஏற்கனவே தங்களது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையில் தற்போது மனிதவள பற்றாக்குறை நிலவுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கும், குறிப்பாக கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் அதிக பணிச்சுமையை குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
.jpeg)