முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர், அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணை, இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கின் சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், பிரதான நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
