கடத்தல்காரர்களால் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, பின்னர் கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்த உலர் இஞ்சித் தொகை நேற்று (24) மீட்கப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பலான புஸ்ஸதேவ மூலம் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கடற்கரைப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட இரண்டு பொதிகளை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
அந்தப் பொதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராமுக்கும் அதிகமான உலர் இஞ்சி மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் இஞ்சித் தொகையை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முருங்கன் மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
