80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது.

 


அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றிலிருந்து குறித்த போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் 204 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று (17) பலபிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.