இலங்கையில் டெங்கு மரணங்கள் 69 ஆக உயர்வு – 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

 நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதிவான மொத்த நோயாளர்களில் 52.95 சதவீதமானோர், அதாவது 49,163 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 19,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளர்களின் 21.30 சதவீதமாகும்.

இதனையடுத்து, கொழும்பு மாவட்டத்தில் 18,433 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,695 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் கடந்த ஜூலை மாதத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த மாதத்தில் மட்டும் 29,964 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை கடந்துள்ள சில நாட்களில் மட்டும் 7,516 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டிலுள்ள 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.